விவசாய சட்டங்களை திரும்ப பெறு!கறுப்பு முகவசத்துடன் வயலில் இறங்கி மஜக ஆர்ப்பாட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!


செப் 27,

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கோரி மஜக சார்பில் அக்டோபர் 2 வரை ஒரு வார கால போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் – தோப்புத்துறையில் கறுப்பு முகவசங்களுடன் வயலில் இறங்கி மஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் சேக் அஹமத் துல்லாஹ், நகர செயலாளர் சரிஃப், நகர துணைச் செயலாளர் முருனானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், உள்ளிட்ட மஜக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்