ஊரடங்கிலும் மனிதநேய சேவை புரிந்த கோவை மஜகவினர்!

கோவை:ஆக.09.,

கொரோனா நோய் தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அதை தொடர்ந்து சாலையோரத்தில் உணவின்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், நகர் மண்டபம், காந்திபுரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H.ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR. பதுருதீன், சிங்கை சுலைமான், அபுதாஹீர், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜூதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், சையது, விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் TMK.காஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், சேட்டு, தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், 78 வது வார்டு செயலாளர் ஜாகிர், MJTSஅசார், சுவனம் அபு, ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்.,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
09.08.2020