பத்தாம் வகுப்பில் மும்பை தமிழ் மாணவர்களும் தேர்ச்சி! அமைச்சர் செங்கோட்டையனுக்கு மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நன்றி..!

2019-2020 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மும்பையை சேர்ந்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மும்பை தமிழர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு அதே நிலைபாட்டை மும்பை தமிழ் மாணவர்களுக்கும் எடுக்க வேண்டும் என்றும் இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள் என்றும் கேட்டு கொண்டார்கள்.

அதனடிப்படையில் அவர் பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார். அதன் பிறகும் இரண்டாவது முறையாக தொடர்புக் கொண்டும் நினைவூட்டினார்.

அதன்படி இன்று மும்பையை சேர்ந்த 69 தமிழ் மாணவர்களும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக இன்று மாலை 5 மணியளவில் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்பு கொண்ட மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், துரிதமாக முயற்சி எடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகக் கூறினார்.

மஜகவின் இம்முயற்சிக்கு மும்பை வாழ் தமிழர்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்.