நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அங்கீகரித்த ஹோமியோபதி மருந்து! நாகூரில் முதற்கட்டமாக முந்நூறு குடும்பங்களுக்கு வழங்கிய மஜக!

ஜூன்.29,
கொரோனா நோய் தொற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும் நடந்துவரும் வேளையில், அந்த நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க அந்த நோய்க்கு கேடயமாக ஹோமியோபதி மருத்துவத்தில் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவதற்காக 200 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இம்மருந்தை கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக எடுத்து கொள்ள தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையும் அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய / மாநில அரசுகள் அங்கீகரித்துள்ள இம்மருந்தை நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகூரில் முதற்கட்டமாக சுமார் 300 குடும்பங்களுக்கு மஜக வினர் இலவசமாக வழங்கியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விநியோகம் செய்ய உள்ளனர்.

இதில் மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் தெத்தி ஆரிப், நாகூர் நகர பொருளாளர் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர்கள் அரபாத், சவுக்கத் அலி, வார்டு செயலாளர்கள் சதாம் உசேன், சுல்தான் மற்றும் கலிமுல்லாஹ், சம்சுதீன் உள்ளிட்டோர் சிறுக்குழுக்களாக பிரிந்து வீடுவீடாக சென்று விநியோகம் செய்தனர்.

கடந்த சில நாட்களாக ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ ஏனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING #நாகூர்_நகரம்
#நாகை_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*