இவ்வாண்டு குலுக்கலில் தேர்வானவர்களை அடுத்தாண்டு ஹஜ் பயணத்திற்கு அனுப்ப வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!

கொரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் புனித ஹஜ் பயணம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் தமிழக ஹஜ் கமிட்டியின் சார்பில் குலுக்கலில் தேர்வானவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக ஹஜ் கமிட்டி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இவ்வாண்டு (2020) புனித ஹஜ் பயணம் செய்ய தேர்வானவர்கள், அடுத்தாண்டு குலுக்கலின்றி ஹஜ் பயணம் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
29-06-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*