திருச்சியில் மஜக சார்பில் முககவசங்களை வழங்கி அறிவுறுத்தல்!


ஜூன்.29,
திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மத்திய பேருந்து நிலையம், நத்தர்ஷா தர்கா, NSB ரோடு, பால்பண்ணை உள்ளிட்டப் பகுதிகளில் முக கவசமின்றி வெளியே வரும் பொதுமக்களிடம் மஜக சார்பில் மாஸ்க் வழங்கி கொரோனா நோயின் தீவிரம் குறித்தும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்து கூறி அறிவுறுத்தினர்.

இந்நிகழ்வு மஜக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் வரகனேரி அபு தலைமையில் நடைப்பெற மாவட்ட செயலாளர் பாபு பாய் முககவசங்களைப் பொதுமக்களுக்கு வழங்கி இவ்விழிப்புணர்வு இப்பரப்புரையை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் சேக் தாவூத், மாவட்ட துணை செயலாளர்கள் தர்கா பாரூக், பஜார் பக்ருதீன், ஜமால் தீன், ஆழ்வார்தோப்பு காதர், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாணவர் இந்தியா செயலாளர் ஷாருக்கான், MJTS செயலாளர் அரியமங்கலம் காதர், MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்பாஸ் மற்றும் மஜக செயல்வீரர்களும் சிறு சிறு குழுவாக பிரிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர்.

இப்பணிகளுக்கு மத்தியில் கலையரங்கம் அருகே வலிப்பு நோய் ஏற்பட்டு ஒருவர் போராடிய நிலையில் மஜக நிர்வாகிகள் அவருக்கு தேவையான முதலுதவி செய்து பத்திரமாக அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.

Top