கல்வியமைச்சர் செங்கோட்டையனுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நன்றி !

மஜக சார்பில் 10 வகுப்பு தேர்வை தெலுங்கானா மாநில அரசு ரத்து செய்ததை போல் தமிழக அரசும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வலியுறுத்தி வந்தார்.

பல்வேறு தலைவர்களும், கட்சிகளும், சமூக அமைப்புகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தின.

இந்த நிலையில் தெலுங்கானா அரசை பின்பற்றி தமிழக அரசும் அவ்வாறு 10 வகுப்பு தேர்வு ரத்து என அறிவித்துள்ளது.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அமைச்சர் செங்கோட்டையனை அலைப் பேசியில் தொடர்பு கொண்டு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தமிழக மக்களிடையே இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING

Top