வெளிநாடுவாழ் தமிழர்கள் மீட்பு! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA மனு!

ஜீன் 9,

கொரோனா நெருக்கடி காரணமாக தாயகம் திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வாழும் தமிழக தொழிலாளர்களை அரசு செலவில் அழைத்து வர வேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஜூன் 3 அன்று காணொளி மூலம் நடைப்பெற்ற மஜக தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி போராட்ட ஆயத்த பரப்புரைகள் தீவிரமானது.

கடந்த ஜூன் 5, 6 மற்றும் 7 தேதிகளில் பதாகை ஏந்தி சமூக இணைய தளங்களில் பதிவிடும் போராட்டமும், தமிழகமெங்கும் பதாகை ஏந்தும் களப் போராட்டங்களும் நடைப்பெற்றது.

ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் வசிக்கும் தமிழர்களும் இதற்கு ஆதரவாக பதாகை ஏந்தினர்.

தலைவர்கள், அரசியல் ஆளுமைகள், திரை உலகத்தினர், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்ததனர்.

இதனால் போராட்டம் ஜூன் 8 வரை நீட்டிக்கப்பட்டது.

இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியாரிடம் இது குறித்த கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.

முதல்வரின் வேண்டுகோளின்படி, அவரது செயலாளர்களில் ஒருவரான ஜெயஸ்ரீ அவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக விளக்கினார்.

சமூக வலைதளங்கள் வழியாக வந்த கோரிக்கைகள் குறித்தும் பேசி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் தற்போதைய வேதனையான நிலைகளையும் எடுத்துரைத்தார்.

கூடுதல் விமான சேவைகள் குறித்தும் பேசினார்.

விரிவாக கேட்டுக் கொண்ட அவர், இது குறித்து முழு விபரங்களையும் முதல்வரிடம் விளக்குவதாகவும் கூறினார்.

புறப்படும் போது இது பல லட்சம் தமிழர் குடும்பங்களின் பிரச்சனை என்பதையும், கடந்த காலத்தில் அவர்கள் நம் நாட்டுக்கு ஈட்டிக் கொடுத்த அன்னிய வருவாயையும் எண்ணிப் பார்த்து நல்ல நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
09-06-2020

#bringbacktnexpats