வேலைக்கு வந்த இடத்தில் மரணம்.! இறந்தவர் உடலை அடக்கம் செய்த மஜக மருத்துவ சேவை அணி.!

சென்னை.மே.26.,
இளையாங்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் சென்னை வடபழனியில் வேலை செய்து வந்தார், இந்நிலையில் அவர் கடந்த 23ம் தேதி எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

பொருளாதாரமின்மை மற்றும் ஊரடங்கு காரணமாக உறவினர்கள் இங்கு வந்து உடலை அடக்கம் செய்ய இயலாத காரணத்தினால், மரணம் அடைந்தவரின் உறவினர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் இன்ஜினியர்.சைபுல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டதன் அடிப்படையில்,

உடலை சொந்த ஊருக்கு இலவசமாக அனுப்ப ஏற்பாடு செய்து தருகிறோம் என்று சொன்ன போது, இறந்தவரின் உறவினர்கள் வேண்டாம் சென்னையிலேயே அடக்கம் செய்துவிடுங்கள் என்று தெரிவித்தனர்.

அதன்படி உடனடியாக மஜக மாநில மருத்துவ சேவை அணி துணைச்செயலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட மஜக-வினர் போலிசாரின் அனுமதியுடன் உடலைப்பெற்று நல்லடக்கம் செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
28-05-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*