டெல்லியில் தவிக்கும் தப்லீக்கினருக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் : முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

ஏப்ரல் 23,

தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் உரிய கிசிச்சை முடிந்து தற்போது டெல்லியில் தங்கி உள்ளனர். மிக குறைவானோர் மட்டுமே கண்காணிப்பில் உள்ளனர்.

தற்போது தமிழகம் திரும்ப முடியாத நிலையில் அவர்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி அங்கு சிரமப்படுகின்றனர்.

இதை அவர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

சமூக சேவகர் அப்பல்லோ ஹனீபா அவர்களும் மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யாவிடம் இதன் விபரங்களை கொடுத்துள்ளார்.

நேற்று மாலை (22-04-2020) இது குறித்து பொதுச் செயலாலர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் IAS., அவர்களிடம் விரிவாக பேசினார்.

அவர், இது குறித்து விசாரிப்பதாகவும், அவர்கள் அடிப்படை வசதிகளுடன் ஒரிடத்தில் தங்க உரிய ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆவணம் செய்வதாகவும் கூறினார்.

இந்த விபரங்களை பொதுச் செயலாளர் அவர்கள், தமிழக தப்லீக் பிரமுகர் கோடம்பாக்கம் ஜமாலுதீனிடமும் பகிர்ந்து கொண்டார்.

மஹராஷ்டிரா, மத்திய பிரதேசம், உ.பி போன்ற மாநிலங்களில் தவிக்கும் தமிழக தப்லீக்கினர் தொடர்ந்து மஜக-வை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து தொடங்கியதும் அவர்கள் தமிழகம் வர உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் மஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிசிச்சைக்குள்ளான தப்லீக்கினர் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் நெகட்டிவ் (கொரோனா இல்லை) என ரிசல்ட் பெற்றுள்ளதும், மற்றவர்கள் விரைந்து குணம் பெற்று வீடு திரும்புவதும் தப்லீக் வட்டாரத்தில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
22-04-2020