ஏப்ரல் 30,
அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படும் டெல்டா மாவட்டங்களுக்கு சீரான மின் வினியோகம் செய்யும் வகையில் நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய மின் பாதை அமைக்கப்பட்டு அது செயலாக்கத்திற்கு வந்துள்ளது.
கடந்த வாரம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மாண்புமிகு மின் துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களிடம் மின் தட்டுப்பாடும், புதிய மின் வழித் தடத்தின் தாமதம் குறித்தும் புகார் கூறினார்.
கொரனா அச்சுறுத்தலுக்கிடையே, சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் , விரைவில் பணிகள் நிறைவடையும் என்று அமைச்சர் பதில் கூறியிருந்தார்.
தற்போது 77.31 கிலோ மீட்டர் நீளத்தில், 230 கிலோவோல்ட் அளவில், புதிய மின் பாதை திட்டம் 100.82 கோடி மதிப்பில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இது நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கான இரண்டாவது மின் வழித்தடமாகும்.
இதனால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் பயன் பெறும்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதையடுத்து, இன்று மின்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கமணி அவர்களை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்.
கொரணா நெருக்கடியில் மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் இத்தருணத்தில், எமது கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு இடையூறுகளை கடந்து, விரைந்து இத்திட்டத்தை நிறைவேற்றியதற்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.