#காவிரி உரிமை மீட்புக் குழுகூட்டத்தில் முடிவு!
மத்திய அரசு சமீப காலமாக மாநிலங்களின் அதிகார பறிப்பை விரைந்து நிறைவேற்றி வருகிறது.
அதில் ஒன்றாக காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய ஜல் சக்தி (நீராற்றல்) துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இது தமிழக விவாசாயிகளிடம் பேரதிர்ச்சியை ஏற்பட்டுத்திள்ளது.
இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் தோழர். பெ.மணியரசன் தலைமையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்.
பல்வேறு விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் சார்பில் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர்..
இதில் பேசிய தோழர். பெ.மணியரசன் அவர்கள், ஆணையத்தின் மந்தமான செயல்பாடுகள், உச்ச நீதிமன்ற வழிகாட்டல்கள், மத்திய அரசின் சூழ்ச்சி, தமிழக அரசின் அலட்சியம் ஆகியவை குறித்து விரிவாக பேசினார்.
கொரோனாவை தங்களின் பொற்காலாமாக கருதி தாங்கள் விரும்பும் ஆரியவாத அரசை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது என்றும்,அதில் ஒன்றுதான் காவிரி உரிமை பறிப்பு என்றும் கூறியவர், மற்றவர்களை மத்திய பாஜக அரசு ஒரு சவுக்கால் அடித்தால், தமிழர்களை 5 சவுக்கால் அடிப்பதாக கூறினார்.
இக்கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள், ஜனநாயக வழியில் உரிமைக்காக தமிழர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
மக்கள் கொரோனாவின் காரணமாக அச்சத்திலும், பசியிலும், சுய தேவைகளை கேட்டுப்பெறும் நெருக்கடியிலும் இருக்கும் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, மத்திய பாஜக அரசு இதுபோன்ற உரிமை பறிப்பு நடவடிக்கைகளில் ஈடு பெறுகிறது என மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் குற்றம் காட்டினார்.
இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மே 1 ( இன்று) முதல் முகநூல், ட்விட்டர், வழியே மத்திய அரசின் நடவடிக்கை கண்டித்து தொடர் பரப்புரை செய்வது என்றும் இதில் நிறைவாக மே 7 “ஹேஷ்டேக் பரப்புரையும்” அன்று மாலை 5:30 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் பதாகை ஏந்தி, கறுப்புக்கொடியுடன் 15 நிமிடங்கள் நிற்பது என்றும் அதை சமூக இணையங்களில் பதிவிட்டு பரப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்றும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இதர வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இப்போராட்டத்தை முன்னெடுக்கப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.