ஜன.26,
நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன் மொழிந்தனர்.
மேலும், புதிய சாலை மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களை சீர் செய்வது குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதில், மஜக மாவட்ட துணை செயலாளர் முன்ஷி யூசுப்தீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் நிசாத், ஏனங்குடி கிளை செயலாளர் பாவா, பொருளாளர் யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.