கூட்டமைப்பு வேண்டுகோள்..! முதல்வருடன் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சந்திப்பு..!

சென்னை.ஜனவரி.08.., இன்று கூட்டமைப்பு தலைவரும் சென்னை மக்கா பள்ளி இமாமுமான மன்சூர் காசிமி அவர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வரை சந்தித்து குடியுரிமை சட்டங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்றும் அதற்கு நேரம் கேளுங்கள் என்றும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் கேட்டு கொண்டார்.

இது குறித்து அன்வர் ராஜாவிடம் தாங்கள் பேசி இருப்பதாகவும் கூறினார்.

நேற்று முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அபுபக்கர் அவர்களும், மஹராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தலைவர்கள் பேசியது போல நாமும் பேச வேண்டும் என தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கூறியுள்ளார்.

அதன்படி இன்று சட்டப் பேரவையில் கருணாசுடன் சென்று தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முதல்வரை சந்தித்து CAA, NRC தொடர்பாக பேசினார்.

சிறுபான்மை சமூக தலைவர்கள் தங்களை இது குறித்து சந்திக்க விரும்புவதால், அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.

வெள்ளிக்கிழமை காலை நேரம் ஒதுக்குவதாக முதல்வர் கூறியதை அவர் கூட்டமைப்பு தலைவரிடமும், அதில் உள்ள INTJ தலைவர் பாக்கரிடமும் தெரிவித்து விட்டார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
08-01-2020