You are here

சசிகலா அம்மா அவர்களுக்கு மஜக வாழ்த்து!

(மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை)

அஇஅதிமுக-வின் பொதுக்குழு கூடி அதன் பொதுச்செயலாளராக சசிகலா அம்மா அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருமனதாக எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கு சம்மதம் தெரிவித்த சசிகலா அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்(MJK) சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 1/2 கோடி உறுப்பினர்களை கொண்ட பேரியக்கமாகவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் திகழும் அதிமுக-விற்கு இப்பொதுக்குழு தீர்மான முடிவுகள் மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மதச்சார்பின்மை, சமூகநீதி, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்தப் பாதையில் சசிகலா அம்மா அவர்கள் சிறப்பாக பயணிக்க மீண்டும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி (MJK).
29/12/2016

Top