குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சங்கராபுரத்தில் மக்கள் எழுச்சி..!! எஸ்எஸ்ஹாரூன்ரசீது கண்டன உரை

கள்ளக்குறிச்சி.டிசம்பர்.30.,

குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளிளும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இன்று (30.12.2019) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் CAA-விற்கு எதிரான கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com., அவர்கள் கலந்து கொண்டார்.

இதில் பேசிய பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தி இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை மக்கள் நடத்தி வருகிறார்கள்.

இதன் மூலம் மக்கள் இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மேலும், #RSS- காரர்களுக்கு தேசியக்கொடி பிடிக்காது RSS- காரர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் என்றாவது சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார்களா.?

பாரதிய ஜனநாயக கட்சிக்கும், அமித்ஷாவுக்கும் தேசியக்கொடி பிடிக்காது. ஏனென்றால் தேசியக் கொடியின் மூன்று வண்ணமும் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஒற்றுமையை உணர்த்துகிறது என்பதால்..

எனவே, மக்களை மத ரீதியாக பிரிக்க நினைக்கும் சங்பரிவாரின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி MLA தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி MLA வசந்தம் கார்த்திகேயன், தமுமுக மாநில துணை தலைவர் கோவை செய்யது, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய இணைச்செயலாளர் அப்துல் பாசித், விசிக மாநில பொதுச் செயலாளர் ம.செ.சிந்தனைச் செல்வன், TNTJ மாவட்ட தலைவர் சாலிக் பாஷா, SDPI மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஷபிக் அகமது மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் அக்பர், யாசின், அக்மல், அப்துல்லா, மற்றும் மஜக-வின் செயல்வீரர்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பெண்களும் இப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்