குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம், மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கைது.!

திருப்பூர்.டிசம்பர்:30

பாரபட்ச முறையில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய அளவில் ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்,

அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக தலைநகர் சென்னை பெசண்ட்நகரில் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, கல்லூரி மாணவிகள் #NO_CAA #NO_NRC என கோலமிட்டு அற வழியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை பொறுத்துக்கொள்ளாத காவல்துறையினர் அந்த மாணவிகளை கைது செய்தனர்.

காவல்துறையின் இந்த கைது நடவடிக்கையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மக்கள் கண்டித்து வந்த நிலையில்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ஹைதர்அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நேற்று சென்னையில் நடந்த மாணவிகள் கைது செய்யப்பட்டது குறித்து விவாதிக்கபட்டு போராட்டத்தை வேறு வடிவத்துக்கு கொண்டுசென்ற மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அதே வடிவிலான எதிர்ப்பாக சாலையில் #NO_CAA #NO_NRC எழுதும் போராட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்தினர்,

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சாலையில் #NO_CAA #NO_NRC என எழுதி கொண்டிருந்த மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஹைதர்அலி, மாவட்ட துணைச்செயலாளர் ராயல் பாட்ஷா, மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் நெளஃபல் ரிஸ்வான், மாவட்டப் பொருளாளர் ஆசிக், இளைஞர் அணியை சார்ந்த அனுப்பர் பாளையம் வஹாப், MJTS கபீர் மங்கலம் ஒன்றிய செயலாளர் இப்ராஹீம், ஒன்றிய பொருளாளர் மஜீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருப்பூர்_மாவட்டம்
31-12-2019