கத்தார் QISF விழிப்புணர்வு நிகழ்ச்சியில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!

தோஹா.டிசம்பர்.29.,

கத்தார் மன்சூரா பகுதியில் QISF தமிழக பிரிவு சார்பாக “புதிய சட்டத்திருத்தங்களும், பறிக்கப்படும் உரிமைகளும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) மண்டலச் செயலாளர் கீழக்கரை முஹம்மது ஹூசைன் தலைமையில் MKP மண்டல, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதில் MKP சார்பில் திருப்பத்தூர் நிஸார் CAA, NRC போன்ற சட்டங்களால் நடக்கும் அநீதிகளை எடுத்துரைத்தார், அதைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அப்துல் ரஜ்ஜாக் பாசிச சித்தாந்தத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து கருத்துரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்நாடு PFI-யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ இலியாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தாயகத்தை போல இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக QMF, IQIC, QITC, ஆயங்குடி ஜமாத் மற்றும் இதர அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியை QISF நிர்வாகி சகோதர் ரிஸ்வான் தலைமையில் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

தகவல்;-
#MKP_IT_WING
#மனிதநேயகலாச்சாரபேரவை.
#கத்தார்_மண்டலம்
27/12/2019