வேலூர்மே.ஆக.14., குடியாத்தம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே கழிவுநீர் தேக்கம் அதிகமாகி வருவதும், சாலை அமைக்காமல் இருப்பதாலும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானதையடுத்து.
மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகரம் சார்பாக குடியாத்தம் நகராட்சி ஆணையர் திரு.செல்வ பாலாஜி அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் S.அனீஸ்,மாவட்ட பொருளாளர் S.MD.நவாஸ்,மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப்,மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன் ஆகியோர் மனு கொடுத்தனர்.
(1) குறிப்பாக 1 மற்றும் 2 வது வார்டில் கால்வாய்வாய்கள் சீரமைக்க வேண்டியும்
(2) MBS நகர் 8வது வார்டில் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதம் முன்பு ஜெசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு இதுவரை சாலை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கவில்லை அதை சரி செய்ய கோரியும்.
(3) மேலும் 34வது வார்டில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும் குடியாத்தம் நகர அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்வாய்கள் தூர்வாரி கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் குடியாத்தம் நகர 36 வார்டுகளில் நாய்களின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புள்ளவதால் நாய்கள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும்.
(4) துப்புறவு பணிகள், குப்பைகள் அகற்றுதல் போன்ற பல்வேறு கோரிக்கை சார்ந்த மனு அளிக்கப்பட்டது.
மஜகவின் கோரிக்கை பெற்றுக் கொண்ட நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதில் நகர துணை செயலாளர் ஷாபீர் உடன் இருந்தார்.
#தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
14.08.2018