மாநாட்டுக்காக உழைத்த அனைவருக்கும் மஜக தலைமையின் நன்றி…

உயிருக்குயிராய் நேசிக்கும் மனிதநேய சொந்தங்களே…!
ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் உரித்தாகுக ! .

இறைவனின் அருளால், கடந்த மார்ச் 26, அன்று நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பேரெழுச்சியோடு நடைபெற்று முடிந்திருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இந்த மாநாடு வெற்றிப் பெறுவதற்காக அயராது உழைத்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் தலைமை நிர்வாகக் குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்சி தொடங்கிய 26 நாளில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறாமல், அடிப்படை விளம்பரங்கள் கூட செய்யாமல் ஒரு பெரும் மக்கள் சக்தியை திரட்டிக் காட்டியிருக்கிறோம்.

கடைசி 1 வாரத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் உரிய அளவில் நன்கொடைகள் வசூல் செய்ய முடியாத நிலை ஆகியவற்றை கடந்து நீங்கள் அத்தனைப் பேரும் ஆற்றிய உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.

நிர்வாகிகள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்தும், கடன் பெற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்து வந்திருப்பதை அறியும் போது நாங்கள் உண்மையில் கலங்குகிறோம்.இப்படிப்பட்ட உறுதியான தொண்டர்கள் கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் .

புதிய பாதை, புதிய பயணம் என்ற நமது முயற்சியில், ஆயிரக்கணக்கான சகோதரர்கள் தியாக உணர்வோடு ஆற்றி வரும் பணிகள் மாபெரும் அரசியல் எழுச்சிக்கான முன்னோட்டம் என்பதில் ஐயமில்லை.

ஆற்றல் மிகு மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளைக்கழக செயலாளர்கள் வரை ,அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் ,செயல்வீரர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.நமது கட்சியின் முகவரிகள் நீங்கள்தான் என்பதில் ஐயமில்லை.

இத்தருணத்தில் உங்களோடு வருகை தந்த பொதுமக்களுக்கும்,மாநாடு வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தித்த நல் உள்ளங்களுக்கு,வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எல்லாம் புகழும் இறைவனுக்கே!
இறுதி வெற்றி நமது அணிக்கே !

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
29-03-2016

1 Comment

 1. மஜக தலைமையின் நன்றி கடிதத்துக்கு மஜக (தொண்டர்) நிர்வாகிகளாகிய எங்களைபோன்றவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆக்ரோஷமான புதியதெம்பு எங்களிடத்தில் வரத்தொடங்கிறது..! எல்லாப்புகழும் இறைவனுக்கே…

  நன்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக.. (கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்டம்)

  கூட்டணி முடிவாகாத நிலையில் கட்சி பிரமுகர்களிடம் நெருங்கமுடியாத நிலை ஒருபக்கம், மறுபக்கம் சூழ்ச்சிகாரர்களின் நிலை, வேறுஒருபக்கம், இந்தநிலையில் அசத்தியத்தை பிரித்தெடுத்தே ஆகவேண்டும் என்பதில், இந்த சத்திய கூட்டத்துக்கு நித்தமும் சுனங்காமல் எந்தமாதிரியான கேள்விகனைகள் நம்மிடத்தில் வந்தபோதிலும் அசராமல் உன்மையே உரக்க சொல்லி இந்த 26 நாள் குறுகிய காலகட்டத்தில் நிதிகளை திரட்டி வாகனங்களை ஏற்பாடு செந்தோம்…

  இதில் இறைவனின் மாபெரும் கிருபை நமக்குகிடைத்தது…!

  மேலும் தமிழகத்திலை இஸ்லாமிய கட்சிகளும் இயக்கங்களும் பல இருந்தபோதிலும்..

  நமது உழைப்பையும் நேர்மையேயும் இளம்துடிப்பான நமது தலைமை நிர்வாகிகளையும் மக்காளால் அறியப்பட்டதாலையே நம்மால் இவ்வளவுபெரிய கூட்டத்தை நிரப்ப முடிந்தது..

  நாங்கள், மாநாட்டு திடலை மக்கள் திரண்டிருந்தவைகளை பார்த்ததும் எங்களின் மாநாட்டு பணிகளில் பட்ட களைப்புகள் எல்லாம் குதுகூலமாக மாறின….

  வல்ல இறைவன் நமக்கொரு அரசியல் அங்கிகாரத்தையும் மன வலிமையேயும் ஏற்ப்படுத்தினான்….! புகழனைத்தும் ஏகனுக்கே….!!

  நமது மஜகவின் அனைத்து பணிகளும் வெற்றிபடிக்கட்டுகளாக வளர்ந்நு வளம் வர இறைவனிடம் பிராத்தித்தவனாக..

  இளைஞ்சர் பட்டாளங்கள் அரசியலில் சாதனை படைத்திட துடிக்கும் இவ்வேலையில் மஜக தலைமை இளைய தலைமுறைகளை நிச்சியமாக வார்த்தெடுக்கும் என உறுதியுடன்…

  இவன்:- சிக்கந்தர் அமீன் புதுமடம் (ஓசூர்) மஜக

Leave a Reply

Your email address will not be published.


*