நாளிதழில் தவறாக வந்த செய்திக்கு மஜக பொதுச்செயலாளர் மறுப்பு…

ஒரு நாளிதழில் நான் கொடுத்ததாக ஒரு பேட்டி வெளியானது. நான் கூறாதது அதில் இருப்பதை படித்தேன். உண்மை என்ன?

மஜக தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு சத்யம் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பானது. அதில் ஒளிப்பரப்பானது இதுதான்.

கேள்வி: உங்கள் கட்சி மமக வை எதிர்த்து போட்டியிடுமா?

பதில்: நாங்கள் நேரடிப் போட்டியை தவிர்க்கவே விரும்புகிறோம். அதே நேரம் தொகுதிகளை கடைசியில் தீர்மானிப்பது இரு கூட்டணிகளிலும் உள்ள பெரிய கட்சிகள்தான், ஒரு வேளை அதுபோல சூழல் அமைந்துவிட்டால் தவிர்க்க முடியாது. நாமென்ன செய்ய முடியும்?

மேற்கண்ட கேள்வி-பதில்தான் நடைபெற்றது. இதற்கு மாறான வார்த்தைகளுடன் வெளியான கருத்துக்களுக்கு நான் பொறுப்பல்ல, இதே கேள்வியை எதிர் கூட்டணியிலுள்ள தலைவர்களிடம் கேட்டாலும் அவர்களும் இதே பதிலைத்தான் சொல்ல முடியும்.

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28_03_16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*