ஏப்.02, நேற்று குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களை ஆதரித்து லப்பைகுடிகாடு பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிப்பெற வேண்டிய அவசியம் குறித்து விளக்கி கூட்டணி கட்சி பேச்சாளர்கள் கருத்துரையாற்றினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #குன்னம்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
Month:
தமிழகத்தை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்..! இராமநாதபுரத்தில் மஜக பொதுச்செயலாளர் பரப்புரை!!
இராமநாதபுரம்.ஏப்.01., இராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் திரு. காதரபாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சின்னக்கடை வீதியில் பரப்புரை மேற்கொண்டார். 8மணிக்கு என பரப்புரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9.20க்கு வந்து சேர்ந்தார். அப்போது கால தாமத்தையும் பொருட்படுத்தாது அவர் உரையை கேட்க மக்கள் பெருந்திரளாக குழுமி இருந்தனர். தமிழ் நிலத்தை பாதுகாக்கும் உயரிய இலட்சியத்திற்காக திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டு பரப்புரை வாகனத்தில் 20நி நின்றவாறு உரையாற்றினார். பரப்புரைக்கு பிறகு ராமநாதபுரம் வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்கள் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு பொதுச்செயலார் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இலியாஸ், மாநில துணை செயலாளர் நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட துணை செயலாளர் முஸம்மில், நகர செயலாளர் நசீர், சோனாப்பூர் அஜ்மல், நசீர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #இராமநாதபுரம்_மாவட்டம் 01.04.21
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது வாக்கு சேகரிப்பு!
கோவை:ஏப்02., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவை செல்வபுரம், லாரிப்பேட்டை, கரும்புக்கடை, பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், ஆகியோர் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தனர். இதில் மாநில துணை செயலாளர் கோவை அப்துல் பஷிர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன்,சிங்கை சுலைமான், மத்திய பகுதி பொறுப்பாளர்கள் ஹனிபா, இப்ராஹிம், 77வது வார்டு செயலாளர் பயாஸ், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 01.04.2021
Sk வேதரத்னத்திற்கு ஆதரவாக_பரப்புரை.! தோப்புத்துறையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு.!!
ஏப்ரல்.01 இன்று வேதாரணியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் S.k.வேதரத்தினத்தை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். தோப்புத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மஜகவினரும், திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களும் சூழ வீதி, வீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மஜக-வின் அரசியல் கோட்டைகளில் ஒன்றான இங்கு வாக்குகளை சிதறாமல் சேகரிப்போம் என்று மஜக-வினர் தீவிர களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் மா.மீ. புகழேந்தி, மஜக மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், நகரச் செயலாளர் கறுப்பு (எ) ஷெரிப் உள்ளிட்டோர் உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #வேதாரண்யம்_தொகுதி 01-04-2021
மேட்டுப்பாளையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்! மஜகவினர் பங்கேற்பு!
மேட்டுப்பாளையம் ஏப்.01., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்ககு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், அவர்கள் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் சுல்தான், தலைமை செயற்குழு உறுப்பினர் நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் காஜாமைதீன், யாசர் அராபத், உமர்பாரூக், ஷேக் மைதீன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_வடக்கு_மாவட்டம் 01-04-2021