You are here

தமிழகத்தை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்..! இராமநாதபுரத்தில் மஜக பொதுச்செயலாளர் பரப்புரை!!


இராமநாதபுரம்.ஏப்.01., இராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் திரு. காதரபாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சின்னக்கடை வீதியில் பரப்புரை மேற்கொண்டார்.

8மணிக்கு என பரப்புரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9.20க்கு வந்து சேர்ந்தார். அப்போது கால தாமத்தையும் பொருட்படுத்தாது அவர் உரையை கேட்க மக்கள் பெருந்திரளாக குழுமி இருந்தனர்.

தமிழ் நிலத்தை பாதுகாக்கும் உயரிய இலட்சியத்திற்காக திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டு பரப்புரை வாகனத்தில் 20நி நின்றவாறு உரையாற்றினார்.

பரப்புரைக்கு பிறகு ராமநாதபுரம் வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்கள் அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு பொதுச்செயலார் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இலியாஸ், மாநில துணை செயலாளர் நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட துணை செயலாளர் முஸம்மில், நகர செயலாளர் நசீர், சோனாப்பூர் அஜ்மல், நசீர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
01.04.21

Top