குமரி:ஜன.27., கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சார்ந்த சமூக செயல் பாட்டாளர் செய்யதலி, அவர்கள் 23-01-2021 அன்று மரண மடைந்தார். இந்நிலையில் கன்னியா குமரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய், அவர்கள் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஜிபூர் ரஹ்மான், நெல்லை மாவட்ட மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் முருகேசன், கன்னியாகுமரி மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது சாஜித், சாகுல், சம்சுதீன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்தொழில்நுட்பஅணி #MJK_IT_WING #கன்னியாகுமரி_மாவட்டம் 26-01-2021.
Month:
மயிலாடுதுறையில்.. விவசாயிகளுக்கு ஆதரவாக நடைப்பெற்ற டிராக்டர் அணிவகுப்பில் மஜக பங்கேற்பு!
ஜன.26, மத்திய அரசே விவசாயத்தை அழிக்கும் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மக்களுக்கு எதிரான மின்சார திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை முயற்சியை கைவிட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை தொடர் மழையினால் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் துரை ராஜ் அவர்களின் தலைமையில் இன்று மயிலாடுதுறை காவேரி நகரிலிருந்து கோட்டாச்சியர் அலுவலகம் வரை தேசிய கொடியுடன் விவசாயிகள் டிராக்டர்- அணிவகுப்பு நடைப்பெற்றது. இப்பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், அஜ்மல் உசேன் மற்றும் ஒன்றிய, நகர, கிளை மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம். 26.01.2021
72வது குடியரசு தினநிகழ்ச்சிகள் மஜக நாகை நகர அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!!
ஜன.26, இன்று மனிதநேய ஜனநாயக கட்சி நாகை நகரம் சார்பாக 72 வது குடியரசு தினம் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @ M.சாகுல் ஹமீது மற்றும் நகர செயலாளர் A.அஜிஜுர் ரஹ்மான் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட பொருளாளர் S.சதக்கதுல்லாஹ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நாகை தொழிலதிபர் தீன் ஹார்வேர்ஸ் உரிமையாளர் E.S.ஷேக் அப்துல் காதர் மற்றும் நகர மஜக நிர்வாகிகள் பாரக், அனாப், அப்துல் உள்ளிட்ட மஜகவின் சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_நகரம். 26.01.2021
திருப்பூண்டியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு இடங்களில் தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கல்!!
ஜன.26, மனிதநேய ஜனநாயக கட்சி நாகை மாவட்டம் திருப்பூண்டி கிளை சார்பாக 72வது குடியரசு தின விழாவை இரண்டு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட, கீழையூர் ஒன்றிய, திருப்பூண்டி கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 26.01.2021
ஈரோடு மஜக சார்பில் 72வது குடியரசு தின விழா! துணை பொதுச்செயலாளர் சையது அஹமது பாருக் கொடியேற்றி சிறப்புரை!
ஜன.26., இந்திய நாட்டின் 72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் SA.சையது அஹமது பாரூக், அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பாபுலால், நகர செயலாளர் சலீம், நகர துணை செயலாளர் மெஸ் பாபு, மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 26-01-2021