ஜன.26, இன்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதக்குடி கிளை சார்பாக 72 வது குடியரசு தினம் மாவட்ட துணை செயலாளர் PMH நத்தர் கனி மற்றும் கிளை செயலாளர் MA முனவர் ஹசன் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை A.ஷேக் ஜெகபர்தீன் (அல்) முன்னிலையில் A.ஷேக் அலாவுதீன் (லண்டன்) ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பொதக்குடி ஜமாத் செயலாளர் M.M ரபியுதீன், ஜமாத் நிர்வாகிகள் P.M.Y கமாலுதீன், K.R.M.புஹாரி, சிஹாபுதீன் மற்றும் கிங்ஸ் கிளப் நண்பர்கள் பங்கேற்க மஜகவின் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 26.01.2021
Month:
72வது குடியரசு தின மஜக நிகழ்ச்சிகள்.! அண்ணாநகர் பகுதியில் மாநில துணை செயலாளர் சமீம் தேசிய கொடியேற்றினார்.!
72வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் மாநிலத் துணைச் செயலாளர் திருமங்கலம் சமீம் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் என்ற உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பி பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன், மற்றும் வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம் 26-01-2021
நாகை MLA அலுவலகத்தில் குடியரசு தினவிழா! தேசிய கொடியேற்றி மரக்கன்றுகளை வழங்கினார் மு தமிமுன் அன்சாரி MLA!
நாகை.ஜனவரி 26, இந்திய திருநாட்டின் 72-வது குடியரசு தின விழாவையொட்டி இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். தேசிய கீதத்திற்கு பிறகு உறுதியேற்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் இனிப்புகளுடன் வருகை தந்த அனைவர்களுக்கும் பழ மரக்கன்றுகள் வழங்கி MLA அவர்கள் வாழ்த்துக்களை கூறினார். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். தகவல், #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 26-01-2021
72வது குடியரசு தின நிகழ்ச்சிகள்..!! மஜக தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கொடி ஏற்றி வைத்தார்..!!
சென்னை.ஜன, 26 நாட்டின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் இந்திய 🇮🇳 தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார், அதை தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி, இளைஞரணி மாநில செயலாளர் முஹம்மது அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது, மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் புதுப்பேட்டை யூசுப், துறைமுகம் பகுதி நிர்வாகிகள் அபு, தாஹா, அசன் அலி, தமீம், அஸ்கர், அம்ஜத், திருவல்லிக்கேணி & சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள் தாஜுதீன், சலீம், கிளை, வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 26.01.2021
இலங்கை கடற்படையால் மீனவர்கள் படுகொலை! மதிமுக தலைமையில் போராட்டம்! மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரையாற்றினார்!
ஜனவரி 25, இலங்கை கடற்படையால் கடந்த வாரம் 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் இதை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழுவிலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என்றும், இதை ஐ.நா.வில் மத்திய அரசு முறையிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சார்பில் திரு.வைகோ MP, அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவரோடு மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அகமது, ஆகியோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி , மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜியா, மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கய்யும், மாவட்ட துணை செயலாளர்கள் காஜாமைதீன், ரவூப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் யூசுப், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஹஸன் பாஷா, மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட