இலங்கை கடற்படையால் மீனவர்கள் படுகொலை! மதிமுக தலைமையில் போராட்டம்! மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரையாற்றினார்!


ஜனவரி 25,

இலங்கை கடற்படையால் கடந்த வாரம் 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்
இதை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழுவிலும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என்றும், இதை ஐ.நா.வில் மத்திய அரசு முறையிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சார்பில் திரு.வைகோ MP, அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

அவரோடு மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அகமது, ஆகியோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி , மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜியா, மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கய்யும், மாவட்ட துணை செயலாளர்கள் காஜாமைதீன், ரவூப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் யூசுப், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஹஸன் பாஷா, மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மஜக வினர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
25.01.2021