வேலூர்.ஆக.29., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேலூர் மாநகரின் பழைய மீன் மார்க்கெட் அருகில் வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் படெல் ஷமீல் அவர்களின் தலைமையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது யாசின் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், அமீன், சாதிக், அன்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 29-08-2020
Month:
வசந்தக்குமார் MP மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான வசந்தகுமார் MP அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். தற்போதைய சட்டமன்றத்தில் நாங்கள் ஒன்றாக பணியாற்றினோம். எனக்கு பின் வரிசையில் அவருக்கு இடம் என்பதால், அதிகம் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் கட்சி சார்பற்று அனைவருடனும் சிரித்து பேசி மகிழ்பவர். எப்போதும் உற்சாகமாக இருப்பார். அவர் அவையில் பேசும் போதெல்லாம் நகைச்சுவை கலந்து தொகுதி கோரிக்கைகளை முன்வைப்பார். அமைச்சர்கள் சிரித்துக் கொண்டே அவரின் கோரிக்கைகளை ஆமோதிப்பார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆற்றல் மிகு கொள்கையாளரான அவருக்கு, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிய அவர், நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி நட்சத்திரமாய் பிரகாசிப்பதற்கு முன்பாகவே உதிர்ந்துப் போனது வேதனையளிக்கிறது. அரசியலை கடந்து தொழிற்துறையிலும் அவர் வித்தகராக திகழ்ந்தார். கடின உழைப்பால் உயர்ந்து, வசந்த் & கோ என்ற நிறுவனத்தை கட்டியமைத்து, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது அவரது நிர்வாக திறமைக்கு ஒரு சான்றாகும். அரசியல், வணிகம், ஊடகம் என பல துறைகளிலும் முத்திரை பதித்த அவர், கொரோனா எனும் கொரில்லா தாக்குதலுக்கு ஆளாகி உயிர் துறந்துள்ளது
நாகையில் பேரெழுச்சி! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
நாகை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூர் கிளை செயலாளர் முஹம்மது இப்ராஹிம், அவர்கள் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கிளை பொருளாளர் சதாம் உசேன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 28-08-2020
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவன தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு…!
சிவகங்கை.ஆகஸ்ட்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் 27.8.2020 அன்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் இனிக்கோ இருதயராஜ் அவர்களை இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார், மஜக பொருளாளர் அவர்களை சால்வை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றார். இச்சந்திப்பின் போது பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது மஜக மாவட்ட துணைச் செயலாளர் இடைக்காட்டூர் S.சதாம் உசேன் உடன் இருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 27-08-2020
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விருதுநகரில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!
ஆகஸ்ட்: 27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மேலப்பாட்டம், கரிசல்குளம், குறிஞ்சி நகர், ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில், கிருமி நாசினி தெளித்து பணியில் மஜக வினர் ஈடுபட்டனர். இதில் விவசாய அணி மாவட்ட செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 27.08.2020