கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவன தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு…!


சிவகங்கை.ஆகஸ்ட்.29.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் 27.8.2020 அன்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் இனிக்கோ இருதயராஜ் அவர்களை இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார், மஜக பொருளாளர் அவர்களை சால்வை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றார்.

இச்சந்திப்பின் போது பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது மஜக மாவட்ட துணைச் செயலாளர் இடைக்காட்டூர் S.சதாம் உசேன் உடன் இருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்
27-08-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.