நாகை.ஆகஸ்ட்-15., 74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவி ப.ராஜேஸ்வரி பாஸ்கரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். பின்னர் கொடிய கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக நாகை ஒன்றியச் செயலாளர் N.ஜலாலுதீன் நாகை ஒன்றிய துணை செயலாளர் M.சதாம் கிளை பொருளாளர் அப்துல் ரஹ்மான் நிர்வாகிகள் மெய்தீன் ஷா, ஹாஜா மெய்தீன் மற்றும் பாஸ்கரன், வேலாயுதம், உமர், ஜமாத் நிர்வாகிகள் தெளபிக், நிஃமத், யுசுப்தின், காசிம், நெளசாத் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 15-08-2020
Month:
74வது சுதந்திர தினம்! மஜக சார்பாக தேனிமாவட்டம் கம்பத்தில் தேசிய கொடியேற்றி கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.!
தேனி.ஆக.15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைமையகத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கம்பம் நகரம் சார்பில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில், அவர்கள் வரவேற்புரையாற்றிட மாநில செயற்க்குழு உறுப்பினர் கம்பம் கரிம், அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் ரியாஸ், அவர்கள் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இறுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி துணை செயலாளர் அம்ஜத் மீரான், அவர்கள் நன்றியுரை நிழ்த்தினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நவாஸ், தொழிற்ச்சங்க அணி செயலாளர் தாஹா, கம்பம் நகர செயலாளர் ஆசிக், சகுபர், நகர பொருளாளர் ஷாஜஹான் இளைஞரணி செயலாளர் அபு, சித்திக் மற்றும் மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் அசரப் ஒலி, உட்பட திரளான மஜக வினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தேனி_மாவட்டம். 15-08-2020
74வது சுதந்திர தினம்! மஜக சார்பாக நெல்லை மாவட்டம் பேட்டையில் இரு இடங்களில் தேசிய கொடியேற்றினர்.!
நெல்லை.ஆகஸ்ட்.15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக இரண்டு இடங்களில் தேசிய கொடியேற்றப்பட்டது. பேட்டை ஐ.டி.ஐ பேருந்து நிலையத்தில் பேட்டை நகரச் செயளாலர் இரா.முத்துக்குமார் தேசிய கொடியை ஏற்றினார். பேட்டை மருத்துவமனை பேருந்து நிலையத்தில் பேட்டை நகரப் பொருளாளர் அசன்கனி தேசிய கொடியை ஏற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயளாலர் நெல்லை நிஜாம் கலந்து கொண்டார் மேலும் நெல்லை பகுதிச் செயளாலர் கலீல், பகுதி துணை செயளாலர் நெல்லை ஜாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேட்டை நகர துணை செயளாலர் ஐ.டி.ஐ.சங்கர் மற்றும் MJTS நகர செயளாலார் ஹபிபுல்லாஹ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திர தினம்! மஜக திருச்சி மாவட்டத்தில் தேசிய கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது.!
திருச்சி.ஆகஸ்ட்-15., 74-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டான அருகில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக திருச்சி மாவட்டச்செயலாளர் பாபுபாய் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்ராஹிம்ஷா, மாவட்ட துணைச்செயலாளர் எம்.பக்ருதீன் மேலும் Er.காதர், ஜமாலுதீன், பேராசிரியர் மைதீன் அப்துல் காதர், இளைஞரணி மாவட்டச் செயலாளர் புரோஸ்கான், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்திக், IT wing செயலாளர் அப்பாஸ், மாணவர் இந்தியா செயலாளர் ஷாருக்கான் மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திர தினம்! குடியாத்ததில் மஜகவின் குடியரசு தின விழா நிகழ்ச்சி..!
வேலூர்.ஆகஸ்ட்-15., இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர், இதில் மஜக மாவட்டப்பொருளாளர் I.S.முனவ்வர் ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார். குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் அவர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.. இந்நிகழ்வில், நகர துணை செயலாளர் சலிம் கிளை நிர்வாகிகள் அல்தாப், ஜாவித், அலிம், சாதிக் முபாரக் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 15-08-2020