தேனி.ஆக.15.,
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைமையகத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கம்பம் நகரம் சார்பில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில், அவர்கள் வரவேற்புரையாற்றிட மாநில செயற்க்குழு உறுப்பினர் கம்பம் கரிம், அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
மாவட்ட செயலாளர் ரியாஸ், அவர்கள் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
இறுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி துணை செயலாளர் அம்ஜத் மீரான், அவர்கள் நன்றியுரை நிழ்த்தினார்.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நவாஸ், தொழிற்ச்சங்க அணி செயலாளர் தாஹா, கம்பம் நகர செயலாளர் ஆசிக், சகுபர், நகர பொருளாளர் ஷாஜஹான் இளைஞரணி செயலாளர் அபு, சித்திக் மற்றும் மாணவர் இந்திய மாவட்ட செயலாளர் அசரப் ஒலி, உட்பட திரளான மஜக வினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தேனி_மாவட்டம்.
15-08-2020