நவ 29, கோவையில் மஜக சார்பு தொழிற்சங்கமான , மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில், புதிய பாதை ஆட்டோ சங்கம் 225 ஆட்டோக்களுடன் செயல் பட்டு வருகிறது. மீட்டர் கட்டணம் மட்டுமே என்பதால், இதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. இதற்கு கொங்கு பஜாஜ் மற்றும் KBS, அபே ஆட்டோ நிறுவனங்களிடம் MJTS மூலம், 10 ஆயிரம் மட்டுமே முன் தொகை கொடுக்கப்பட்டு, தினமும் 200 ரூபாய் கடன் செலுத்தும் வகையில் ஏழை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நேற்று இவ்வாறு 25 ஆட்டோக்கள் , பல்வேறு ஓட்டுனர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி MJ TS சார்பில் நடத்தப்பட்டது. இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது ஆட்டோ ஓட்டும் ஏழை தொழிலாளர்களை, ஆட்டோ உரிமையாளர்களாக மாற்றும் உன்னத திட்டம் என்றும், ஏழைகளின் முன்ேனற்றம் குறித்து கவலைப்படும் மஜக வின் மனித நேய பணி என்றும் சிலாகித்தார். அத்தோடு முன்பெல்லாம் ஆட்டோக்களில் " பிரசவத்திற்கு இலவசம் " என்ற வாசகம் இருக்கும் என்றும், இப்போது அதை காண முடியவில்லை என்றும் குறை பட்டவர், இனி
Month:
மீரான்மைதீனை சந்தித்தார், மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி!
நவ.29, மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் மன்னை.செல்லசாமி தலைமையில் சந்தித்த மஜக மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து பரோல் வழங்கியது. தற்போது ராபர்ட் பயாகக்கும் பரோல் வழங்கியுள்ளது. நேற்று, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மீரான் மைதீனை முன் விடுதலை செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு சமூக மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதற்கு பொதுச் செயலாளரை அழைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு மீரான் மைதீன், தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட செயலாளர் மைதீன்பாபு, மாவட்ட பொருளாளர் சசிக்குமார், மாவட்ட துணை செயலாளர் மோகன், மாவட்ட அணி நிர்வாகிகள் கேபிள் பாட்ஷா, இப்ராஹிம், கனி, பிரித்வி, ஒத்தக்கடை சுலைமான், கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #மதுரை_மாவட்டம்.
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ராஜபக்க்ஷேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் : மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
நவ.29, இன்று ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சேலம் மாவட்ட மஜக நிர்வாகிகளை சந்திப்பதற்காக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் ஈரோடு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- "இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவர் தான் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே! அவர் தனக்கு வாக்களிக்காத கோபத்தில் ஈழ தமிழர்கள் வாழுமிடங்களில் ஆயுதம் தாங்கிய படை வீரர்களை நிறுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது, ஏன் இந்த இராணுவ ரோந்து? அங்கு மொழி மற்றும் மத சிறுபான்மையினர் சம அளவில் நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் புவிசார் அரசியல் நலன் கருதி அவரை இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறார்கள். இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள், இலங்கை வாழ் தமிழ் பேசும் சகல மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து ராஜபக்க்ஷேவிடம் வலியுறுத்த வேண்டும். சென்னை IIT யில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் இதுவரை உயர் சாதி சமூகத்தவர் என கூறப்படும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகிகளாக. மாவட்டச் செயலாளராக. M.பீர் மைதீன், த/பெ:முகம்மதுகனி 5/144 மணக்காடுதெரு அச்சன்புதூர். தென்காசி மாவட்டம் அலைபேசி:9789754356 மாவட்டப் பொருளாளராக. M.S.S.முகம்மது இப்ராஹிம் 30/12 மரைக்காயர் பள்ளிவாசல் தெரு தென்காசி மாவட்டப் துணைச் செயலாளராக. பொன்னானி M.அபுதாஹிர் த/பெ:முகம்மது மைதீன் 72/20 பாறையடி 2வது தெரு தென்காசி ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27-11-2019
கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் கிணத்துகடவு பகுதி அலுவலகதிறப்பு விழா!!
கோவை:நவ.27., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துகடவு பகுதி அலுவலக திறப்பு விழா பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர் அக்பர்அலி, மற்றும் பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA,அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், தொழிற்சங்கமாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சுலைமான், முஸ்தபா, மற்றும் மாவட்ட, அணி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 27.11.19