கோவை:நவ.30., கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை கேரள மாநிலம் புது நகரம் பகுதி முஸ்லிம் லீக் கட்சியின் பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் தமிழக, கேரள, அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடத்தவிருக்கும் இலவச திருமண விழாவிற்கு வருமாறு முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். இச்சந்திப்பில் மஜக கோவை மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளார் TMS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 27.11.19
Month:
மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகரம் சார்பில் இரத்ததான முகாம்!!
நவ.30 ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் மாநகர மனிதநேய கலாச்சார பேரவை மற்றும் கேரள கம்யூனிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் Lathifa Hospital-ல் நடைபெற்றது. இம்முகாமிற்கு அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். இரத்ததான முகாமை 89.4 FMன் RJ நாகா, அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமீரக பொருளாளர் H.அபுல் ஹசன், அமீரக து.செயலாளர் A.அசாலி அஹ்மது, அமீரக கொள்கை பரப்பு செயலாளர் Y.அப்துல் ரெஜாக், IT Wing துணை செயலாளர் பொதக்குடி அசார், துபை மாநகர துணைச் செயலாளர்கள் பயாஸ் அகமது,சலீம், செயற்குழு உறுப்பினர் ஆசிப், துபாய் IT WING செயலாளர் N.சபீர் அஹமது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை துபை மாநகர பொருளாளர் லால்பேட்டை சபீக், அவர்கள் ஒருங்கிணைத்தார் இறுதியாக துபாய் மாநகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாமில் திரளானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: #MKP_தகவல்தொழில்நுட்பஅணி #MKP_IT_WING #மனிதநேயகலாச்சாரபேரவை #துபாய்_மாநகரம்_UAE 29.11.2019
பள்ளப்பட்டி அல்மதரசத்துள்மஹ்மூதியாவின் ஐந்தாம்ஆண்டு நிறைவு விழா!, முதமிமுன்அன்சாரி MLA பங்கேற்பு
நவ.30, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அல்-மதரசத்துள் மஹ்மூதியாவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களும், 'இலக்கு 2040' அமைப்பின் நிறுவனர் ஆசிரியை சபரிமாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். நிறைவாக போட்டிகளில் வென்றவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், T.J. முஹம்மது ஜாவித், பள்ளப்பட்டி வடக்கு பள்ளி இமாம் மௌவுலானா மௌலவி அல்ஹாஜ் யஹ்யா ஹஸ்ரத், பள்ளப்பட்டி தமிமுன் அன்சாரி, இக்பால் தாவூதி, ஹாஜி ஜியாவுதீன், பாப்புலர் அபு மற்றும் முஹம்மது ரியாஸ் உட்பட ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர். மஜக சார்பில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, கரூர் மாவட்ட செயலாளர் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் உவைஸ் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அபு, மைலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஷரீப் மற்றும் பள்ளபட்டி மஜக சகோதரர்கள் பலரும் திரளாக கலந்துக் கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கரூர்_மாவட்டம். https://m.facebook.com/story.php?story_fbid=2124098944356536&id=700424783390633
சிறுமி பாலியல் படுகொலை, உரியஇழப்பீடு பெற முயற்சிப்போம்!, மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLAஉறுதி!
நவ.29, நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியில் உள்ள சித்தன் இருப்பு என்ற கிராமத்தில் , 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆசிகா என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த நவ.09 அன்று கொல்லப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயது நிரம்பிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த அபலை சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையைப் பெற்றுக் கொடுக்குமாறு "இலக்கு 2040 " அமைப்பின் நிறுவனர் ஆசிரியை சபரிமாலா அவர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை பள்ளப்பட்டியில் சந்தித்து மனு கொடுத்தார். இது தொடர்பாக மாவட்ட அமைச்சர் திரு.O.S. மணியன் அவர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பேசி உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக பொதுச் செயலாளர் வாக்களித்தார். அந்த பெற்றோரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். கல்வி உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் விழிப்புணர்வுக்காக ஆசிரியை பதவியை துறந்து விட்டு தியாகப்பூர்வமாக செயல்படுவதற்காக ஆசிரியை சபரிமாலாவை பொதுச் செயலாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கரூர்_மாவட்டம்.
மஜக காஞ்சி வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!
காஞ்சி.நவ.29.., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று (28-11-2019) மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொருப்பாளருமான பல்லாவரம் ஷஃபி கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் செயல்பாடு இல்லாமல் இருக்கும் சில நகர, கிளை நிர்வாகங்களை கலைத்துவிட்டு புதிய நிர்வாகங்களை அமைப்பதற்க்கு முடிவு செய்யப்பட்டது. மற்றும் எதிர்வரும் டிசம்பர்-21 அன்று குற்றாலத்தில் நடைபெறும் நிர்வாகிகளுக்கான பயிலரங்கத்தில் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்பு அழைப்பாளர் பல்லாவரம் ஷஃபி அவர்கள் நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காஞ்சிவடக்குமாவட்டம். 28-11-2019