துபாய்.ஜூன்.01., நேற்று 31.05.18 ஐக்கிய அரபு அமீரகம் துபையில் அமீரக நாகூர் சங்கம் சார்பில், பிரபல சமூக ஆர்வலர் ஷேக்தாவுது மரைக்காயர் தலைமையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது #Nagoor_Sangam.com என்ற இணையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமீரக நாகூர் சங்கம் 'ANAS' என்று சுருக்கமாக கூறப்படுகிறது. 'அனஸ்' என்றால் அன்பு என்று அர்த்தம். நாகூர் மக்களின் மீது கொண்ட அன்பு காரணமாக 'அனஸ்' உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரபல நபித்தோழரின் பெயரும் கூட 'அனஸ் ரலி' என்பதை நினைக்கும் போது, மிக சரியான ஒரு வார்த்தை நாகூர் மக்களை இணைக்கிறது. அனைத்துக் சமூக மக்களும் சேவையாற்ற இச்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாடுகளில் வாழும் நாகூர் மக்களை இந்த இணையதளம் இணைக்க விருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இணைய தளத்தை நல்ல வகையில் பயன்படுத்துங்கள். சமூக இணையதளங்களில் பொறுப்புணர்வோடு கருத்துக்களை பகிரவேண்டும். விரைவில் நாகூரில் ஒரு ஐக்கிய ஜமாத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார். தொகுதி மக்களுக்கு தான் செய்து வரும் பணிகள் குறித்தும் பட்டியலிட்டார். இந்நிகழ்வில் அமீரக