ஏப்.02., கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இளம் புயல் ஆட்டோ தோழர்கள் சங்கத்தின் சார்பில் குடந்தை மஜக நகர செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் தலைமையில் கோடைக்கான தண்ணீர் பத்தல் திரக்கப்பட்டது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் முகமது யாசின், ஒன்றிய பொருப்பாளர் இப்ராஹிம்ஷா, குடந்தை நகர துணை செயலாளர் தஜீமல் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சிக்கு தான் அனைவரும் ஓட்டு போடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... எல்லாப் புகழும் இறைவனுகே...!!! -தகவல் : மஜக ஊடகப்பிரிவு குடந்தை நகரம்.
Month:
மஜக-அஇஅதிமுக தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை இன்று நலமுடன் முடிந்தது…
ஏப்.02., போயஸ்தோட்டத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் S.S.ஹாரூன் ரஷித் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளுடன் அஇஅதிமுக பொதுச்செயளாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது சுமுகமான தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை நலமுடன் முடிந்தது எனவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு அஇஅதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல்களில் 200 க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார். -தகவல் மஜக தலைமை ஊடகப்பிரிவு