மார்ச்.20., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக நேற்று (19.03.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு. இர. ராஜேந்திரன் MLA., அவர்களை மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 20.03.2024.
தமிழகம்
தமிழகம்
விமல்ராஜ் திருமண நிகழ்வு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து..
மார்ச் 20, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தனி உதவியாளர் விமல்ராஜ் அவர்களின் திருமணம் இன்று தோப்புத்துறை அருகே செம்போடையில் நடைபெற்றது. மணமகன் விமல்ராஜ் BE,MBA, மணமகள் சத்யா MSc ஆகியோரின் திருமணத்தில் இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று வாழ்த்தி அனைத்து நிகழ்விலும் பங்கேற்றார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அவர்களும் நேரில் சென்று வாழ்த்தினார். மாவட்டம் முழுவதிலிருந்தும் மஜக-வினர் சகோதர உணர்வுடன் வருகை தந்து வாழ்த்தினர். ரமலான் நோன்பு காரணமாக வர இயலாத மஜக-வினர் சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்துககளை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத், அவைத் தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆம்ஸ்(எ) அஹமதுல்லா, பேபி ஷாப் பகுருதீன், பாலமுரளி, திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் வேதை தோப்புத்துறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_மாவட்டம் 20.03.2024.
அறிவாலயத்தில் மஜக! கட்டுமரமா? போர் கப்பலா? – உங்களுக்கு என்ன பதவி? அவர்கள் இருந்தால் சங்கடம் வராதா? உற்சாக நிகழ்வுகளுடன் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் பேட்டிகள்..
மார்ச்.19., இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தலைமை நிர்வாகக் குழுவினர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் தளபதி. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். 2024- நாடாளுமன்ற தேர்தலில் மஜக எந்த திசையில் செல்லும்? என்ற கேள்வி பரபரப்பாக இருந்தது. கடந்த பிப்ரவரி 28, அன்று மயிலாடுதுறையில் மஜக நடத்திய பொதுக் குழுவில் இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டது. தலைமை நிர்வாகக்குழுவின் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கடந்த இரண்டு வார புதிய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏதாவது ஒரு கூட்டணியில் தொகுதியை பெற்று போட்டியிடுவதா? நாடு தழுவிய அளவில் மோடியிசத்தை வீழ்த்த வேண்டும் என்று உருவாகியுள்ள மக்கள் மனநிலையை உணர்ந்து பொது நல முடிவு எடுப்பதா? என்ற கேள்விகள் எழுந்தது. காங்கிரஸ் தரப்பிலிருந்து தரப்பட்ட வேண்டுகோளும் பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து சான்றோர்கள் - அறிஞர்கள் சந்திப்புகளிலும், பாஜக ஆட்சியை அகற்றும் வண்ணம் உங்கள் முடிவுகள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். அதன் பிறகே அனைத்தையும் விவாதித்து துணிச்சலான- தியாகப் பூர்வமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என முடிவானது. இறுதியாக
நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு திமுக தலைமையிலான INDIA கூட்டணிக்கு ஆதரவு மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு…
மார்ச்.19., நடைபெறவுள்ள 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்திருக்கிறது. இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், ஃபாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம். கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 19.03.2024.
ST கொரியர் இஃப்தார் பலஸ்தீனர்களுக்காக பிரார்த்திப்போம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
மார்ச்.08., பிரபல வணிக நிறுவனமான #ST கொரியர் சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சென்னை - ராயபுரம் - ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. இதில் #மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். அப்போது கூறியதாவது... பலஸ்தீன மக்கள் நோன்பு காலத்தில் காலை சஹர் உணவுக்கும், நோன்பு துறப்புக்கும் உணவின்றி தவிக்கிறார்கள். அம்மக்களின் தேவைகள் நிறைவேறவும், சுதந்திர பலஸ்தீனம் மலரவும், இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் வீழ்ச்சியடையவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் ' என பேசினார். இதில் ST கொரியர் நிறுவனர் அன்சாரி, நவாஸ் கனி MP உள்ளிட்ட ST கொரியர் குடும்பத்தினர் பங்கேற்று அனைவரையும் வரவேற்றனர். இதில் அரசியல், சமூகம், கல்வி , வணிகம் ஆகிய துறைகளை சேர்ந்த ஆளுமைகளும் பங்கேற்றனர். இதில் தலைவர் அவர்களுடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_வடசென்னை_கிழக்கு_மாவட்டம் 18.03.24.