இந்திய திருநாடு தன் 72 வது குடியரசு தின விழாவை கொண்டாடுவது நமக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. மக்களாட்சி தத்துவத்தின் வெளிப்பாடுதான் குடியரசு என்ற சொல்லாடலின் பெருமிதமாக அறியப்படுகிதது. வெவ்வேறு இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் இருப்பினும் ஒன்றுபட்ட மக்களாக வாழ்வதே குடியரசின் சிறப்பாகும். இந்நாளில் வெறுப்பு அரசியல், சாதி, மத வெறி, வன்முறை , சுரண்டல் ஆகியவற்றுக்காக எதிராக போராட உறுதியேற்க வேண்டும். அமைதியும் ,ஒற்றுமையும் கொண்ட தேசத்தை கட்டமைத்து , ஜனநாயகம் செழித்திட நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று கூறி அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 25.01.2021
வாழ்த்து அறிக்கை
வசந்தமும் காட்டுப் பூக்களின் வாசமும் வீசட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பொங்கல் வாழ்த்து!
உலக தமிழர்களின் சர்வதேச திருநாளாக பொங்கல் விழா திகழ்கிறது. தமிழர் திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும், அறுவடை திருநாள் என்றும் இது பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பசுமை புரட்சி, வேளாண் பொருட்கள் உற்பத்தி, கால்நடைகளின் நலன், நீராதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஒரு திரு நாள் கொண்டாடப்படுவது தமிழர்களின் தனிப் பெரும் பண்பாட்டை எடுத்துரைக்கிறது. இந்தியாவிலேயே சிறப்புக்குரிய தனிப் பெரும் கலாச்சாரத்திற்குரியவர்கள் தமிழர்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அறுவடையில் திரளும் பொருளாதார வளத்தை கொண்டு குடும்ப நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது நம் மண்ணில் ஒரு பாரம்பர்ய வழக்கமாக உள்ளது. அதனால்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழியும் உருவானது. இவ்வருடம் தொடர் மழையால் பல மாவட்டங்களில் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலையளித்தாலும், அவர்களின் வயலும்,வாழ்வும் சிறக்க வாழ்த்துவோம். கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து விவசாயத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளங்களை மீட்டெடுத்தல், வேளாண் உற்பத்தி பெருக விவசாயிகளுக்கு துணை நின்றல் என இத்திருநாளில் உறுதியேற்போம். தமிழகம் உட்பட உலகமெங்கும் பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைவரது வாழ்விலும் வசந்தமும், காட்டுப் பூக்களின் வாசமும் வீசிட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 13.01.2021