அக்.17, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்டோபர் 17 முதல் டிசம்பர் 31 வரை, 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவிலான இம்முகாமை இன்று தஞ்சை மாவட்டம் பண்டாரவடையில், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். அதை முன்னிட்டு பண்டாரவடை எங்கும் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மாலை 4 மணி முதல் மழை கொட்டியதால் நிகழ்ச்சியை தொடங்க தாமதமானது. பிறகு மழை தணிந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிலையிலும் திரளானோர் அங்கு கூடினர். உறுப்பினர் சேர்ப்பு தொடக்க விழா அறிமுக பதாகையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட, மாநில செயலாளர் ராசுதீன் அதை பெற்றுக் கொண்டார். அப்போது மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா கட்சியின் முழக்கங்களை எழுப்ப அதை அனைவரும் எதிரொலித்தனர். பிறகு வரிசையில் வந்து பலரும் படிவத்தில் கையெழுத்திட்டு, பொதுச் செயலாளரிடம் அடையாள அட்டையை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இவ்வாண்டு குறித்த நேரத்தில் இன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. மஜகவுக்கும் இது பருவ
You are here
Home > உறுப்பினர் சேர்க்கை (Page 15)