தென்காசி:ஆக.16., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் கிளை, வாவா நகரம் கிளை, அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பில் கொரோனா நோய் தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் மாவட்ட துணை செயலாளர் வாவை A. இனாயத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் M.முகம்மது பஷீர், வடகரை பேரூர் கிளை துணை செயலாளர்கள் K.அமானுல்லா, K.செய்யது அலி, இளைஞரணி செயலாளர் M.முகம்மது அசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் A.நவாப் சர்புதீன், வாவா நகரம் கிளை சித்திக், கலீல் ரகுமான், அச்சன் புதூர் கிளை செயலாளர் முகம்மது நாசர், துணை செயலாளர் சேக் முகமது, இளைஞரணி செயலாளர் செய்யது அலி மற்றும் திரளான
இஸ்லாமிய கலாச்சார பேரவை
மஜக நெல்லை மாவட்ட மருத்துவசேவை அணி சார்பாக பேட்டையில் கபசூரகுடிநீர் விநியோகம்.! மேலும் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்.!
நெல்லை.ஆக.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் பேட்டை நகரத்தில் மருத்துவ சேவை அணி சார்பில் பேட்டையில் உள்ள M.G.P தெருவில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது, இதில் பொதுமக்கள் அனைவரும் கபசுரக் குடிநீரை வாங்கி பருகினர். அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்துவரும் தொடர் மக்கள் பணிகளால் ஈர்க்கப்பட்டு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியிலேயே 20-க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் புகாரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்து ஜமீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மருத்துவ சேவை அணி சார்பாக பேட்டை நகர பொருளாளர் அசன் கனி, பேட்டை நகரத் துணைச் செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 16-08-2020.
கூட்டாட்சி தத்துவத்தை மலடாக்கிட அனுமதிக்க கூடாது!ஐரோப்பிய தமிழர்களுக்கு மத்தியில் மு தமிமுன் அன்சாரி MLA காணொளி உரை!
ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தின விழாவையொட்டி ஐரோப்பிய பெரியார்- அம்பேத்கார் தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் காணொளி கருத்தரங்கு நடைப்பெற்றது. தோழர் விஜய்அசோகன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வல்லம் பஷீர் அவர்கள் முன்னுரையாற்றினார். இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் மட்டுமின்றி, உலகம் எங்கும் வாழும் தமிழர்களும் பங்கேற்றனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின் வருமாறு. இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நமது விடுதலைக்காக போராடிய தமிழ் போராளிகளை நினைவு கூற விரும்புகிறேன்.வரலாறு பிரபல தேசிய தலைவர்களை மட்டுமே போற்றுகிறது. நாம் எல்லோரையும் போற்ற வேண்டும். மன்னர்கள்,தலைவர்கள், தளபதிகள், வீரர்கள் என பலரின் தியாகங்கள் வழியே தான் சுதந்திரம் மலர்ந்தது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருதநாயகம், தீரன் சின்னமலை, ஒன்டி வீரன், வீரன் அழகுமுத்துக் கோன், வீரன் சுந்தரலிங்கம் , மருது சகோதர்கள் என பல மாவீரர்களின் தியாகங்களையும் நாம் போற்ற வேண்டும். பின்னாளில் காந்தியடிகள், நேரு, அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கார் போன்றோர் அன்னியர்களிடமிருந்து அஹிம்சை வழியில் போராடி
74வது சுதந்திரதினம். கோவையில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பில் தேசிய கொடியேற்றி கபசுர குடிநீர் வழங்கும் விழா!!
கோவை: ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) சார்பில் கோவை பெரியகடை வீதி பகுதியில் வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் நொளபல் பாபு, அவர்கள் தலைமையில் தேசிய கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ABT.பாருக் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து, உறுதி மொழி வாசித்தார், பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சதாம், வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஹாரூன், ஜமேஷா, ஜகான், பஷீர், 78வது வார்டு செயலாளர் ஜாஹிர், அனிஸ், அர்னால்டு அக்கிம், மற்றும் நிர்வாகிகள்
74வது சுதந்திரதினம்.!மஜக கோவை மாநகர் மாவட்டம் தெற்கு பகுதியில் தேசிய கொடியேற்று விழா!!
கோவை:ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாய கட்சி கோவை மாநகர் மாவட்டம் தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பகுதி பொருளாளர் ரஹ்மத்துல்லா, தெற்குப் பகுதி துணைச் செயலாளர் நௌஷாத், ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உறுதி மொழி ஏற்று பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR. பதுருதீன், ABT.பாருக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் சமது, ஜாகிர் உசேன் அன்சர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் சதாம் உசேன், தெற்கு பகுதி துணை செயலாளர்கள் ஷாஜஹான், சுல்தான், அப்பாஸ், பகுதி இளைஞரணி செயலாளர் நிஷார், சுவனம் அபு, அர்னால்ட் அக்கீம், சையத் இப்ராஹிம், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 15.08.2020