சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தோம். காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். சர்ச்சைக்குரிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்ததால் தமிழகம் முழுக்க இதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. அதன் எதிரொலியாக இன்று தமிழகம் முழுக்க ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருக்கிறது. இதை வரவேற்கிறோம். இதை நிரந்தர தடையாக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மனித உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் வழியில் அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இதற்கு ஏற்பளிக்கும் வகையில் தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 05.07.2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
கோவையில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!!
ஜூலை:04., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பெரிய கடைவீதி, போத்தீஸ் கார்னர், ஜமேசா தர்கா, ஆகிய பகுதிகளில் வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஹாரூன், ஜமேஷா, சிராஜுதீன், அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்களை, வழங்கினர். இதில் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், என சுமார் 500க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம். 04.07.2020
மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு! சமூக நீதி பேண ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதன்முதலில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2018-19 ஆம் ஆண்டில் 4 மாணவர்களுக்கும், 2019-20 ஆம் ஆண்டில் 5 மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையை மாற்றி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை தீர்மானித்து, அதற்கான அவசர சட்டத்தை கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படாமல் தாமதிக்கப்படுகிறது.. இது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அதேநேரத்தில், மிக முக்கியமான அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பும் போது, சட்ட ஆலோசனை என்ற பெயரில், ஆளுநர் தாமதம் செய்வது நியாயமல்ல. தமிழக அரசு இது குறித்து
கோவையில் மஜக இளைஞரணி சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!!
ஜூலை:03., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உக்கடம் பேருந்து நிலையம், கெம்பட்டி காலனி, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், ஆகிய பகுதிகளில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, அவர்கள் தலைமையில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H. ஜாபர் அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் ஹக்கீம், அபு, சுவனம் அபு, சிராஜுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். இதில் வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள், என சுமார் 800க்கும் அதிகமானோர் கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம். 03.07.2020
சவூதிவாழ் தமிழர்களின் சிறப்பு விமானம் தரைஇறங்க விரைந்து அனுமதி தேவை! தமிழக அரசிடம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
ஜூலை 03, சவூதியில் உள்ள தமிழ் நாடு (NRI ) பெற்றோர்கள் சங்கம் சார்பில் தாயகம் திரும்ப சார்ட்டர்டு விமானம் (6E 8929) தம்மாமிலிருந்து புறப்பட்டு திருச்சி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தரை இறங்கும் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக முகவை.சீனி அவர்கள் மஜகவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது குறித்து தமிழக அரசின் சிறப்பு அதிகாரி திரு.செந்தில் IAS மற்றும் முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். விரைந்து ஏற்பாடு செய்வதாக அவர்கள் பதில் அளித்துள்ளனர். இது போல் சவூதியிலிருந்து மனிதநேய சொந்தங்களால், IKP ஏற்பாட்டில் அங்குள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளிலிருந்தும் சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குவைத்திலிருந்து MKP சார்பில் கடந்த வாரம் முதல் சிறப்பு விமானம் திருச்சி வந்த நிலையில், இரண்டாவது சிறப்பு விமானம் ஏற்பாடாகி வருவது குறிப்பிடத்தக்கது. கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுடன் பயணிகள் சிறப்பு சார்ட்டர்ட் விமானங்களை பதிவு செய்து