சிறப்பான முறையில் சவூதியில் சேவைகள் ஆற்றிய அருமை சகோதரர் ஹாஜா இஸ்மாயில் (எ) ஹாஜா நஜ்முதீன் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்து இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். மஜக உருவான நாள் முதல் கட்சியின் தீவிர களப்பணியாளராக அறிமுகமாகி, சிறந்த பரப்புரையாளராக பரிணாமித்தார். அவர் தமாம் மண்டல துணைச்செயலாளராக பணியாற்றியவர். துடிப்பு மிக்க செயல் வீரர். விடுமுறையில் ஊருக்கு வந்தாலும் கட்சி பணிகளில் கவனம் செலுத்துபவர். முகநூல்களில் கட்சியின் செய்திகளை உடனுக்குடன் பகிரக்கூடியவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவை மாவட்டச்செயலாளரை தொடர்பு கொண்டு கோவைக்கு IKP சார்பில் ஏற்பாடு செய்து வரும் சிறப்பு விமானத்தில் வருபவர்களுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இறுதி நிமிடம் வரை மக்கள் சேவை ஆற்றிய சிறந்த ஊழியரை மஜக இழந்துள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு தான் இவரது சகோதரி மரணமடைந்தார். ஒரே வாரத்தில் இரண்டு மரணங்களை அக்குடும்பம் சந்தித்துள்ளது துயரமானது. ஒரு சிறந்த கட்சியின் ஊழியரை இழந்துள்ள சோகம் எம்மை வாட்டுகிறது. இறைவன் அவர் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அவரது மறு உலக வாழ்வை சிறப்பித்திட பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 09-07-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
மனிதாபிமான சேவையை தொடரும் மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழு!
ஜூலை.09, துபை ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணிக்கு சிறப்பு விமானங்களில் தமிழர்கள் வருகை தந்தனர். அவர்களில் கடந்த நாட்களில் மஜக வினரின் சேவையை முகநூல் வாயிலாக அறிந்த வழுத்தூர், ராமநாதபுரம், காரைக்கால், தஞ்சாவூர், பாண்டிச்சேரி பகுதிகளை சேர்ந்த பயணிகளின் உறவினர்கள் மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்டிருந்தனர். ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்தை அடைந்த மஜக மாவட்ட செயலாளர் பக்கிர்மைதீன் (எ) பாபுபாய், பொருளாளர் சேக்தாவுத், துணை செயலாளர்கள் M. பக்ருதின் , Er.காதர், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், MJTS செயலாளர் G.K.காதர் உள்ளிட்ட சேவைக்குழு பொறுப்பாளர்கள் 5 கர்ப்பிணிகள் மற்றும் முதியவரை சொந்த மாவட்டத்தில் தனிமைப்படுத்தி கொள்ள ஏதுவாக அதிகாரிகளிடம் பேசி உரிய ஏற்பாடுகளை செய்து உறவினர்களுடன் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கொரோனா விதிமுறைகளால் ஒருசிலர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் பலமாதங்கள் தாமதமாக வருகை தரும் தங்கள் உறவுகளை வரவேற்க வருகை தருபவர்களுக்கு உற்ற தோழனாக தோள்கொடுக்கும் மஜகவின் இப்பணி பயணிகளையும், அவர்களின் உறவுகளையும் நெகிழ்ச்சியடைய செய்கிறது. அதனை அவர்கள் நன்றி கூறி விடைபெறும் தருணங்களில் உணர முடிகிறது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம். 08/07/2020
வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அந்தந்தநாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க_வேண்டும்! – மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA
கொரோனாவுக்கு முன்பாக வெளிநாடுகளிலிருந்து ஆன்மீக பயணமாக தமிழகம் வந்திருந்த தப்லீக் பயணிகள் விசா விதிமீறல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு பிறகு அவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர். பிரான்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து , புருணே, எதியோப்பியா, பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த 129 பேர் அதில் உள்ளனர். அதில் 12 பெண்களும் அடங்குவர். இவர்கள் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது... விசா விதி மீறல்கள் குறித்து கைதான தப்லீக்கினர் ஜாமீன் பெற்று வந்ததும், அவர்களின் வழக்குகளை முடித்து வைத்து, மஹாராஷ்டிரா சிவசேனை அரசு அவர்களை அந்தந்த நாடுகளின் தூதரகங்களிடம் ஒப்படைத்து விட்டது. கர்நாடக பாஜக அரசு அவர்களை ஹஜ் இல்லத்திலும், தெலுங்கானா மாநில அரசு பள்ளிவாசல்களிலும், டெல்லி மாநில அரசு சிறப்பு விடுதிகளிலும் தங்க வைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, அவர்கள் ஜாமீன் பெற்று வந்தும், சிறார் சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு ஜாமீன் பெற்றுள்ள அவர்களை, மதரஸா அல்லது தனியார் கல்லூரியில் தங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்து, மஹாராஷ்டிர சிவசேனை
அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அண்ணன் அவர்கள் பூரண சுகம் பெற மஜக பிரார்த்தனை
திண்டுக்கல் சரக DIG அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!!
ஜூலை:08., திண்டுக்கல் சரக புதிய டிஐஜி யாக பொறுப்பேற்றுள்ள திரு, முத்துசாமி IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி, C.A. சாந்து முஹம்மது, அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பின் போது டிஐஜி அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மஜக வினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் வர்த்தகர்களும், முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் சர்புதீன், ஷாஜஹான், சையது பாபு, பழனி நகர நிர்வாகிகள், சையது காதர், சேக் அப்துல் காதர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம் 08/07/2020