நவ.02, மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்கி வைக்க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் இன்று குத்தாலம் வருகை தந்தார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் வருவாய் இழந்துள்ளனர். இந்த 7 மாதங்களில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு கூட மத்திய அரசு நேரடி உதவிகளையோ, பண்டிகை உதவிகளையோ வழங்கவில்லை. தீபாவளியை முன்னிட்டாவது மத்திய அரசு நாடெங்கிலும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மனுநீதி மற்றும் திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர் இது குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றார். ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அவர் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக கூறியவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினி ஆன்மீகம், அமைதி, தனிமை என விரும்புபவர். அரசியல் என்பது நெருக்கடி, மன அழுத்தம், பரபரப்பு ஆகியவற்றை கொண்டது. இது ரஜினியின் இயல்புக்கு ஒத்து வருமா? என தெரியவில்லை என்றார். மூப்பனார் காலத்தில் அவர் அழைத்தப் போதே வந்திருந்தால் அவர்
அறிக்கைகள்
அமைதியை கெடுப்பவர்களை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்! அறந்தாங்கியில் மஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
புதுக்கோட்டை.அக்.31, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அறந்தாங்கியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம், மாவட்டச் செயலாளர் அறந்தாங்கி முபாரக் ஆகியோர் உடன் இருந்தனர். அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், அறந்தாங்கியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை அமளி துமளியாக்கி விட சிலர் துடிக்கிறார்கள். இதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றவர், தமிழகத்தில் பெரியாரிசம், அண்ணாயிசம், கம்யூனிசம், தமிழ் தேசியம் ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். பிறகு தொண்டர்களுடன் உரையாடி, கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார். பிறகு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின்( MJTS) பெயர் பலகையை திறந்து வைத்து, நகரில் 4 இடங்களில் மஜகவின் கொடிகளை ஏற்றி வைத்தார். முன்னதாக நகரின் முக்கிய வீதிகள் வழியே மஜக கொடிகளுடன் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது. அலுவலக திறப்பு விழா பகுதி மஜக தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் துணிச்சல் மிக்க நடவடிக்கை ! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
அரசுப் பள்ளிகளில் படித்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5. சதவீத இட ஒதுக்கீடு வழங்க நேற்று தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூக நீதியை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளதை துணிச்சலான நடவடிக்கை என பாராட்டுகிறோம். இதற்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 30.10.2020
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதளிக்காமல் கால தாமதம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உள் இடஒதுக்கீடு கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முதலில் எழுப்பியது நாங்கள் தான். அந்த வகையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிக்காட்டுகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சார்பில், மக்கள் பிரதிநிதிகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஆளுனரின் ஜனநாயக கடமையாகும். எளிய மக்களின் நலன் காக்கும் ஒரு சமூக நீதி விவகாரத்தில், முடிவெடுப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இச்சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது. இம்மசோதா குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் கவர்னரை சந்தித்தப் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறோம் என அவர் சொன்னதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கும்,
இசேவை மையங்களை அதிக அளவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் நோய்த்தடுப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இப்பணிகளில் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில், வழக்கமான பணிகளை செய்திட, அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் இ-சேவை மைய ஊழியர்களையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. தற்போது இ- சேவை மையங்களின் பணிகள் அதிகம் தேவைப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீள அரசு வழங்கும் உதவிகள், புதிய தொழில் தொடங்க அரசு வழங்கும் வங்கிக்கடன் ஆகியவற்றிற்கு இ-சேவை மையம் மூலம் பல்வேறு இணைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக ஆதார் அட்டை விண்ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்வது போன்ற தேவைகள் மக்களுக்கு உள்ளது. சென்னை போன்ற மாநகராட்சிகளில் இடவசதிகள் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே தற்போது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப இ-சேவை மையங்களை அதிக அளவில், பரவலாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 15.10.2020