மார்ச்:01,மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முஹம்மது ரிஸ்வான், அவர்கள் கட்சி கொடி ஏற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஆதம், மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் உமர், தமிமுன் அன்சாரி, நகர செயலாளர் கரீம் பாஷா, நகர துணை செயலாளர் ஜாபர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING விழுப்புரம் வடக்கு மாவட்டம் 28.02.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
கொள்ளுமேட்டில் மஜக 7ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி.!
மார்ச்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக கடலூர் தெற்கு மாவட்டம், கொள்ளுமேடு கிளையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர், லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர், OR. ஜாக்கிர் ஹூசைன் அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING கடலூர் தெற்கு மாவட்டம் 28.2.2022
ரஷ்யா,உக்ரைன் போரை நிறுத்து! மே 17 இயக்க ஒன்றுகூடல்.. மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
சென்னை.மார்ச்.01., உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கண்டித்தும், அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூலிப்படையை கலைக்கக் கோரியும் மே-17 இயக்கம் சார்பில் இன்று சென்னையில் போராட்ட ஒன்று கூடல் நடைப்பெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று முழக்கமிட்டார். ஆங்கிலம் மற்றும் தமிழில் போருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அனைவரும் அணிவகுத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர்.மு.வீரபாண்டியன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தோழர்.தனியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர்.ஆறுமுக நயினார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தோழர்.வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் ஆளுமைகளும் இதில் பங்கேற்று முழக்கமிட்டனர். இதில் மஜக பொதுச் செயலாளருடன் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அகமது, MJVS மாநில துணை செயலாளர் சேட், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் உள்ளிட்டோரும் உடன் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING
பொதக்குடியில் மஜக ஏழாம் ஆண்டு துவக்க விழா! மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!
மார்ச்:01 மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி யில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அந்நூருல் முஹம்மதியா அரபிக்கல்லூரி நிர்வாகி PMP.ருக்னுதீன், அவர்கள் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்கள். மேலும் பொதக்குடி VAO சுகுமாரன் அவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து மஜக வின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளை செயலாளர் முனைவர் ஹசன், ஜமாத் நிர்வாகிகள் மஹதும் மைதீன், ரபியுதீன், ஷாஜஹான் , சேக் ஜெகபருதீன், கிளை பொருளாளர் ஜலாலுதீன். Ikp செயலாளர் அபி, மாணவர் இந்தியா செயலாளர் தாஹிர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING திருவாரூர் மாவட்டம் 28.02.2022
அய்யம்பேட்டையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா!
மார்ச்:01.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை வடக்கு மாவட்ட கொடியேற்ற விழா அய்யம்பேட்டையில் நகர செயலாளர் சேக் தாவுத், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வர்த்தக அணி மாநில செயலாளர் யூசுப் ராஜா, அவர்கள் கட்சி கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் அய்யம் பேட்டை காதர் பாட்சா, அவர்கள் முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் நகர இளைஞர் அணி செயலாளர் முகய்யது இயாஸ்தீன் நிர்வாகிகள் முகம்மது நாவஸ், அபூபக்கர், சிராஜ்தீன், சாகுல் ஹமிது, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING தஞ்சை வடக்கு மாவட்டம் 28.2.2022