சென்னை.மார்ச்.01., உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கண்டித்தும், அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூலிப்படையை கலைக்கக் கோரியும் மே-17 இயக்கம் சார்பில் இன்று சென்னையில் போராட்ட ஒன்று கூடல் நடைப்பெற்றது.
வள்ளுவர் கோட்டம் அருகில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று முழக்கமிட்டார்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் போருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அனைவரும் அணிவகுத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர்.மு.வீரபாண்டியன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தோழர்.தனியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர்.ஆறுமுக நயினார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தோழர்.வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் ஆளுமைகளும் இதில் பங்கேற்று முழக்கமிட்டனர்.
இதில் மஜக பொதுச் செயலாளருடன் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அகமது, MJVS மாநில துணை செயலாளர் சேட், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் உள்ளிட்டோரும் உடன் பங்கேற்றனர்.
தகவல்,
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
சென்னை
01.03.2022