மார்ச்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டணம், மற்றும் பனைக்குளத்தில், மஜக வின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், அவர்கள் பங்கேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்வில் மாவட்ட , நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING இராமநாதபுரம் மாவட்டம் 28.02.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
ஈரோட்டில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா! அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய மஜகவினர்!
பிப்ரவரி 28, மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று தமிழக மெங்கும் மஜக சார்பில் கொடி நாள் என அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக ஈரோடு கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் சபீக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் அ.பாபு ஷாஹின்ஷா, கலந்து கொண்டு கட்சி கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட செயலாளா் செல்ல காஜா, மற்றும் மாவட்ட துணை செயலாளா்கள் ஆட்டோ பாபு, பக்கீா் முகமது, MJTS சபா் அலி, இளைஞரணி துணை செயலாளா் தாஜ்தீன், பகுதி செயலாளா் ஹாரீஸ், நிர்வாகிகள் முகமது ரிஸ்வான், சையது, இஸ்மாயில், சாஜித், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING ஈரோடு கிழக்கு மாவட்டம் 28.02.2022
இளையான்குடியில் மஜக 7ஆம் ஆண்டு தொடக்க விழா!
சிவகங்கை.பிப்.28., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING சிவகங்கை மாவட்டம் 28.02.2022
நெல்லையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா!
நெல்லை.பிப்ரவரி:28., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நெல்லையில் இரண்டு இடங்களில் கொடியேற்றபட்டது. இந்நிகழ்வுகளுக்கு நெல்லை மாவட்டசெயலாளர்நிஜாம் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி 20-வது வார்டில் பேட்டை நகர பொருளாளர் அசன்கனி கொடி ஏற்றினார், நெல்லை மாநகராட்சி 18-வது வார்டில் மனிதஉரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் கொடியேற்றினார். நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாரினர். இந்நிகழ்வில் மஜக நிர்வாகிகள் நெல்லை ஜாகிர், அசரப்அலி, அப்துல்காதர், ஆதிமூலம், அல் அமீன், ஜமால் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மருத்துவசேவை அணி மாவட்ட துணை செயலாளர் டில்லி சம்சுதீன் சிறப்பாக செய்திருந்தார். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-IT-WING நெல்லை மாவட்டம் 28.2.2022
சத்தியமங்கலத்தில் மஜக 7ஆம் ஆண்டு தொடக்க விழா!
பிப்ரவரி:28, ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி மாவட்ட துணை செயலாளர் பாபுலால், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல், மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJK-it-WING ஈரோடு மேற்கு மாவட்டம் 28.02.2022