நாகை. மார்ச்.14., நாகப்பட்டினத்தில் 5 மாவட்ட மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராகவும், மீனவர்களின் படகுகளை மத்திய அரசு மீட்டுத்தரக் கோரியும், அவர்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இன்று (14.3.17) மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி ஆகியோர் நேரில் சென்று மீனவ தலைவர்களுடன் உரையாடினர். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம், தமிழக அரசு கண்டிப்பாக வலியுறுத்தும் என்று கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
Author: admin
இலங்கையிலிருந்து 77 மீனவர்கள் வருகை… அமைச்சர்கள் மற்றும் நாகை MLA வரவேற்பு!
காரைக்கால்.மார்ச்.14., நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த, இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 77 மீனவர்கள் இன்று காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். அவர்களை நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறிதுறை அமைச்சர் O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி, மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.14.3.17.
மதுக்கடையை அகற்ற கோரி மஜக மனு!
ஈரோடு. மார்ச்.14., ஈரோடு மேற்கு மாவட்டம் பவாணியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துவரும் டாஸ்மாக் மதுபான கடையை (எண் 3408) அகற்ற கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் டாஸ்மாக் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING ஈரோடு மேற்கு மாவட்டம்
JNU பல்கலைக்கழக மாணவர் தற்கொலை- முத்துகிருஷ்ணன் இல்லத்தில் மாணவர் இந்தியா…
சேலம்.மார்ச்.14., சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் JNU பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட உண்மை நிலை அறிய மாணவர் இந்தியா சேலம் மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர் பியாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர் முத்துகிருஷ்ணன் அவர்களது இல்லத்திற்க்கு சென்றனர். பெரும் சோகத்தை சூழ்ந்துகொண்ட சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் முத்துகிருஷ்ணனின் அண்ணனிடம் நடந்த விபரங்களை கேட்ட பொழுது தன் தம்பி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறினார்.மேலும் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை,தலித் மாணவர்களின் சுயமாரியாதைக்கு என்றும் பாதுகாப்பு இல்லை என்று முத்துகிருஷ்ணனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முத்துகிருஷ்ணனின் தற்கொலையில் நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா போராடும் என்று ஆறுதல் கூறினர். இச்சந்திப்பில் பாபு, சதாம், அம்ஜத்,சாந்த் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: ஊடக பிரிவு, மாணவர் இந்தியா, சேலம் மாவட்டம். #Maanavar_India
மஜக-மாணவர் இந்தியா கோரிக்கையை ஏற்று சாலை அமைப்பு…
திருவள்ளூர்.மார்ச்.13., திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி தியாகி சத்தியமூர்த்தி நகர் 6வது தெரு குறுகிய தெருவென்பதால் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது. பின்னர் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் முயற்சியில் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் செய்யப்பட்டது. தேர்தல், வர்தா புயல், நகராட்சி தேர்தல் தாமதம் என நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இத்தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மாணவர் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து தந்த அரசு நிர்வாகிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 13.03.2017