ஏப்.19.,மனித நேய ஜனநாயக கட்சியின் உடன்குடி நகர கிளை 19-04-2016 அன்று மாலை 4மணிக்கு உடன்குடி மெயின் பஜாரில் உள்ள V.S.R.காம்ப்ளக்ஸில்வைத்து மஜக உடன்குடி நகர கிளை ஆரம்பிக்கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் அப்பாஸ் மரைக்காயர், மாவட்ட து.செயலாளர் A.R.சாகுல் ஹமீது, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகம்மது ரஃபிக் , மாவட்ட தொழிலாளர்கள் அணி செயலாளர் அப்துல் அஜிஸ், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப், காயல்பட்டினம் நகர செயலாளர் ஆஷாத் , தூத்துக்குடி மாநகர் செயலாளர் நவாஸ் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. உடன்குடி நகர செயலாளர் F.பரக்கத்துல்லாஹ்(9677755903) உடன்குடி நகர பொருளாளர் A.அலி முகம்மது (9840825086) ஆகியோர் உடன்குடி நகர பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு
Author: admin
நாகை தொகுதியில் ஒரே நாளில் 25 கிராமங்களில் பரப்புரை !!
ஏப்.19., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணியின் மனித நேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் M. தமிமுன் அன்சாரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஒரே நாளில் 25 கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஒரே நாளில் அதிரடியாக மஐகவினர் திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் 25 கிராமங்களுக்கு சென்று சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றியதை பார்த்த அதிமுக தோழர்கள் ,ஒரு பெரிய அரசியல் கட்சிக்கு இணையாக பணிபுரிகிறீர்களே என பாராட்டினார்கள். செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்கள் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு வரவேற்பு கொடுத்ததோடு ஒரு துடிப்பான இளைஞர் வேட்பாளராக வலம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்கள். கோவில்கள் பள்ளிவாசல்களில் அங்குள்ள நிர்வாகங்களின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தமீமுன் அன்சாரியின் அணுகுமுறைகள் குறித்து நல்ல அபிப்ராயம் உருவாகி வருவது குறிப்பிடதக்கது. தகவல் : மஜக ஊடகப் பிரிவு