SP.பட்டினத்தில் மஜக கிளை உதயம்…!

image

image

தொண்டி. டிச.30., இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கப்பட்டது.

இதில் மாநில செயலாளர் சீனி முகம்மது,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.M.ஹாரிஸ், மாநில செயற்குழு உறுப்பினர் MMH.முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்களின் அறிவுறுத்தளின் படி, மாவட்ட துணை செயலாளர் முகம்மது, வர்த்தகரணி செயலாளர் இப்னு சூது, மாவட்ட விவசாய அணி ராஜா ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கிளை செயலாளராக சுல்தான், பொருளாளராக முகம்மது ரபீக், துணை செயலாளர்களாக செய்யது அன்சாரி, நல்ல இப்ராஹீம் பாதுஷா ஆகியோர் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் சீனி முகம்மது முன்னிலையில் ஏராளமானோர் மஜகவில் இணைந்ததனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_கிழக்கு