மாதாவரத்தில் பரப்புரை…. நிலமெல்லாம் ரத்தம் (பலஸ்தீன வரலாறு) நூலை முதல்வரிடம் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வழங்கினார்….

ஏப்ரல்.15.,

இன்று காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் – வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து மாதாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார்.

அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முதல்வருக்கு பாலஸ்தீன விடுதலை போர் தொடர்பாக பா.ராகவன் எழுதிய

‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற நூலை பரிசளித்தார்.

காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் பாலஸ்தீன விடுதலை குறித்த இந்நூலை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி முதல்வருக்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
15.04.2024.