மத்திய சென்னை… எழுச்சியை ஏற்படுத்திய Road Show… தயாநிதி மாறனை ஆதரித்து நடந்த பரப்புரை… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

ஏப்ரல்.15.,

மத்திய சென்னை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடந்த “Road Show” பரப்புரையில் இன்று மனிதநேய ஜனநாய கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தனர்.

திமுக பகுதி செயலாளர் பெரியமேடு சுதாகர் அவர்களது ஒருங்கிணைப்பில்
மஜக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மொய்தீன் தலைமையில் திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.

மாலை 5.30 மணியளவில் பெரியமேடு மசூதி அருகில் தொடங்கிய Road Show இரவு 9.30 மணிக்கு புளியந்தோப்பு பகுதியில் நிறைவுற்றது.

வழியெங்கும் மக்கள் வெள்ளத்தில் பரப்புரை வாகனம் செல்ல ; பூக்களை தூவி வரவேற்று ஆதரவு நல்கினர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இப்பரப்புரை குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேசிய மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், ‘சமீபத்தில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்று Road Show-வை விட இதில் மக்கள் கூட்டம் அதிகம் என்றும், ஒரு தொகுதிக்குட்பட்ட மக்கள் மட்டுமே பங்கேற்றதை பார்க்க முடிந்தது என்றும் பேட்டியளித்தார்.

இந்நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகள் கொடிகளுடன் பங்கேற்றனர்.

நிறைவாக தலைவரிடம் நன்றி கூறிய தயாநிதி மாறன், மஜக நிர்வாகிகளை அழைத்து படம் எடுத்துக் கொண்டர்.

இதில் மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹீம், வல்லம் கபீர் மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் அஸாருதீன், பேராவூரணி சலாம், ஹாரீஸ், எஸ்.எம்.நாசர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், வழக்கறிஞர் பாசறை செயலாளர் அமீன் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_மாவட்டம்