நாகை ஒன்றியம் சிக்கல்,பொரவச்சேரி, ஆழியூர் ஊராட்சியில் MLA ஆய்வு!

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் பொரவச்சேரி, சிக்கல் ரேஷன் கடைக்களுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனடியாக வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பிறகு, ஆழியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2017_18) ரூபாய் […]

image

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் பொரவச்சேரி, சிக்கல் ரேஷன் கடைக்களுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனடியாக வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு, ஆழியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2017_18) ரூபாய் 4.000.00 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கல்வெட்டு பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17.

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter